மகாராஷ்டிரா: உட்ரே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குடும்பத்தாருக்கு தெரியாமல் தனது காதலரை மணந்தார். பின்னர் குடும்பத்தார் திருமணத்தை ஏற்று நேற்று (ஜன. 08) வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். மணப்பெண்ணின் மாமா மகேஷ் என்பவர் மட்டும் கோபத்தில் இருந்த நிலையில் வரவேற்பில் சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலந்தார். நல்வாய்ப்பாக இதை சிலர் பார்த்ததால் யாரும் சாப்பிடவில்லை. புகாரின் பேரில் தலைமறைவான மகேஷை போலீஸ் தேடுகிறது.