சென்னை மாங்காட்டை சேரந்த 23 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு அறிமுகமான ஈனோக் (29) என்பவர் தன்னை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்தார். இதனால், ஈனோக்குடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்தார். கடந்த ஜன. 06-ல் இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய ஈனோக் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை நேற்று (ஜன. 08) கைது செய்தனர்.