மணப்பாறையில் நடந்த கிராம மக்கள் கூட்டம்

570பார்த்தது
மணப்பாறை நகராட்சி, நகராட்சி எல்லையில் உள்ள கிராமங்கள் இணைத்து நகராட்சியினை விரிவாக்கும் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இதுகுறித்து கருத்து கேட்பு கடிதங்கள் அனுப்பட்டுள்ளதாம். தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கான தொடர் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு மேலமஞ்சம்பட்டி, இடையப்பட்டியான்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் மேலமஞ்சம்பட்டி திடலில் கூடி நகராட்சியுடன் கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சியுடன் கிராமங்களை இணைப்பதால் கிராம ஊராட்சியில் கிடைக்கப்பெற்று வரும் அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்காது, வரி அதிகம் செலுத்த வேண்டி, வரும், கழிவு பாதைகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்படாது, மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகள் கிடைக்காது எனவே நாங்கள் ஊராட்சி நிர்வாகத்திலேயே இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி