கடலூர் தேவனாம்பட்டினம் முகத்துவரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 32 மாடுகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், கடலூர் தாழங்குடா பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள், கடலில் ஒரு மாடு உயிருடன் இருப்பதை பார்த்துள்ளனர். புயலால் அடித்துச் செல்லப்பட்டு, 6 நாட்களுக்கு பிறகு மாடு உயிருடன் இருந்துள்ளது. அந்த மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டால், படகு கவிழ்ந்து விடும் என்பதால் மாட்டு உரிமையாளர்களுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.