ரூ 20 லட்சம் கேட்டு கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் சித்ரவதை

67பார்த்தது
ரூ 20 லட்சம் கேட்டு கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் சித்ரவதை
திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகள் திவ்யா (வயது 37). திருச்சி கலெக்டர் அலுவலக வருவாய்த்துறை
பிரிவு அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரும் செங்கல்பட்டு அச்சரப்பாக்கம் பள்ளி பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரும் கடந்த 2016ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பின்னர் தாமோதரன் வியாபாரத்தில் ஈடுபட்டார் இதில் அவருக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது அதைத் தொடர்ந்து மனைவியிடம் ரூபாய் 20 லட்சம் பணம் கேட்டார்.
பின்னர் திவ்யா ரூபாய் 7 லட்சம் பணத்தை கணவரிடம் கொடுத்தார்.
அதன் பின்னரும் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார்.
மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதாக திவ்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால்அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி