கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய நாம் தமிழர் நிர்வாகிகள் கைது

79பார்த்தது
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கரட்டாம்பட்டியில் அரசு நிலத்தில் அரசு அனுமதியோடு,
TSK என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை
மதுராபுரியை சேர்ந்த தங்கவேல் என்பவர்
நடப்பாண்டு (2024 ) முதல் 2029 ஆம் ஆண்டு வரை 5 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில்
கடந்த 3ஆம் தேதி காலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அருண்குமார், செல்லதுரை, ராஜாங்கம் ஆகியோர்
"நீ உரிய அனுமதியின்றி கல்குவாரியை நடத்தி வருகிறாய்.
இதுகுறித்து யூடியூப் சேனலில் வெளியிடுவேன்.
அவ்வாறு வெளியிடாமல் இருக்க
எங்களுக்கு 2லட்ச ரூபாய் கொடு இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் தங்கவேலு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில்
கல்குவாரி குறித்த
செய்தி
கரிகாலன் வளையொலி என்ற youtube சேனலில் வெளியானது.
அதில்
அரசு அனுமதியின்றி கல் குவாரி செயல்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக புலிவலம் காவல் நிலையத்தில் தங்கவேலு புகார் அளித்தார்.
புகாரின் பேரில்
வீடியோ வெளியிட்ட மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி இணைச்செயலாளர் அருண்குமார், மணச்சநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் செல்லதுரை, மற்றும் ராஜாங்கம் ஆகிய மூவர் மீதும் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து புலிவலம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி