தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் விஜய் அரசியல் கட்சியை துவங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த தலைமை முடிவு செய்துள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் அக். 27 ஆம் தேதி மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில் கனமழை காரணமாக தவெக மாநாடு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக காணப்படுவதால் மாநாட்டு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.