துறையூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

66பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு சொத்துவரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரியும் கஞ்சா புழக்கத்தை கட்டுபடுத்த கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் துறையூர் நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி