துறையூர் பச்சைமலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு. எஸ் பி வருண்குமார் அதிரடி திருச்சி மாவட்டம் துறையூர் பச்சைமலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண்குமார் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பச்சமலைப்பகுதி கிராமங்களில்அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில், துறையூர் வண்ணாடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்கிற இளையராஜா என்பவர் காட்டுப் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 8 பேரல்களில் இருந்த சுமார் 1200 லிட்டர் லிட்டர் சாராய ஊறல்களையும் , அருகில் உள்ள கிராமங்களான கிணத்தூர், நொச்சிகுளம், புதூர் , தண்ணீர் பள்ளம் , சின்ன வல்லம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 8 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பச்சைமலைப் பகுதியைச் சார்ந்த நபா்களிடம் எச்சரித்தனர். , இது தொடர்பாக துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரடியாக பச்சைமலை பகுதியை ஆய்வு செய்து கள்ளச்சாராய ஊழல் பேரல்களைக் கைப்பற்றிஅழித்தது குறிப்பிடத்தக்கது.