துறையூரில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு முகாம் நடைபெற்றது.

74பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில்திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு அமர்வு முகாம் நடைபெற்றது. புதுடெல்லியில் இருந்து வந்திருந்த தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன் சிறப்புரையாற்றினார்.

முகாமில் குழந்தைகள் கல்வி உதவித்தொகை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பிறப்புச் சான்று வாரிசு சான்றிதழ் காப்பீட்டு திட்ட அட்டை குடும்ப அடையாள அட்டை மருத்துவ உதவி மற்றும் குழந்தைகளுக்கான தொழில் பயிற்சி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா, குழந்தைகளின் பெற்றோரிடம் நேரடியாக விசாரித்து மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு காண துறை சார்ந்த அலுவலர்களுக்கு மனுக்களை ஒதுக்கீடு செய்து தீர்வு காண அறிவுரை வழங்கினார். மேலும் முகாமில் பங்கேற்ற பொது மக்களிடமிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மாவட்ட அளவில் அரசு துறை அதிகாரிகளும் துறையூர் வட்டார அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் முகாமில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you