திருவெறும்பூர் எச்இபிஎப் தொழிற்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
திருவெறும்பூர் எச்இபிஎப் தொழிற்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள
மத்தியஅரசின்பாதுகாப்புத்துறை தொழிற்சாலையான எச் இ பி எப் யில் இன்று காலை பி எம் எஸ் என்கின்ற பாரதீய மஸ்தூர் சங்கத்துடன் இணைந்த எச் ஏ பி எஃப் மஸ்தூர் சங்கம் சார்பில் ஆலையின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கே சுந்தர்ராஜன் தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் ஆர். குரு, இணை செயலாளர் பி கருப்பையா பொருளாளர் என். தர்மராஜ், முன்னாள் பொதுச் செயலாளர் எஸ் அலெக்சாண்டர், கௌரவத் தலைவர் எஸ் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது
8 ஆவது ஊதியக்குழுவை விரைந்து அமைக்க வேண்டும்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பை உடனே வழங்க வேண்டும்.
வருமான வரி உச்சவரம்பை 8 லட்சமாக உயர்த்த வேண்டும்.
குரூப் இன்சூரன்ஸ் தொகையினை 15, 25, 50 லட்சமாக உயர்த்த வேண்டும்.
டிசம்பர், ஜூன் மாத இறுதியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரு சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் தலைவர் பேசினார். இதில் மாநில மாவட்ட சங்க நிர்வாகிகள், துப்பாக்கி தொழிற்சாலை சங்க நிர்வாகிகளான அருள் சேவியர், சங்கர், வடிவேல், சக்ரியாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் துணைத்தலைவர் எம் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி