டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்குமாலை அணிவித்து மரியாதை

77பார்த்தது
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133வது பிறந்தநாளை, முன்னிட்டு இன்று விசிக வின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சக்தி ஆற்றலரசு அவர்களின் வழிகாட்டுதலின்படி பெல் வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுத்தை குணா தலைமையில், கணபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், சமத்துவ நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.
திருவெறும்பூர் வடக்கு தெற்கு ஒன்றியங்கள், துவாக்குடி நகரம், கூத்தைப்பார் பேரூர், ஆகிய அமைப்புகளுக்குஉட்பட்ட, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், முகாம், துணை நிலை அமைப்புகளின், அணிகள், மையங்கள், தொழிற்சங்கங்கள், பேரவைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி