தமிழ் புத்தாண்டு - பழனியில் குவியும் பக்தர்கள்

56பார்த்தது
தமிழ் புத்தாண்டு - பழனியில் குவியும் பக்தர்கள்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், ராஜ அலங்காரத்தில் இருந்த முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கூட்டம் காரணமாக கோயிலில் சுமார் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி