இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்தவர்கள் கைது

38574பார்த்தது
இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்தவர்கள் கைது
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் ஒரு தனியார் கல்லுாரி அருகே உள்ள ஹோட்டலில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. அங்கு விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து தாராபுரம் செட்டிபாளையத்தைச் சேர்ந்த அசோக் என்கிற முருகானந்தம், (28), சிறுமுகை வெள்ளி குப்பம்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (27), கோவை ஈச்சனாரியை சேர்ந்த செல்வராஜ் (26) மற்றும் மும்பையை சேர்ந்த 25, 21 வயது இளம்பெண்கள் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி