திருச்சி உக்கிர காளியம்மன் கோவில் தேரோட்டம்

572பார்த்தது
திருச்சி உக்கிரமாகாளியம்மன் திருக்கோவிலில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வருடம்தோறும் பால்குட ஊர்வலம், காவடி எடுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு முதன்முதலாக இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், பக்தர்கள் பங்களிப்புடன் சுமார் 29 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மரத்தேர் 60- லட்சம் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டு, கடந்த 20ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்நிலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மரத்திலான புதிய தேரில் முதன்முதலாக சித்திரை தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான புதிய மரச்சிற்ப தேரில் உக்கிர மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் கொடி அசைக்கப்பட்டு புதிய தேரை பக்தர்கள் ஓம் சக்தி - பராசக்தி என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரின் முன்பு தேவராட்டம், பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, செண்டை மேளம் தப்பாட்டம் உள்ளிட்ட வாத்திய இசைகள் முழங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி