திருச்சி: பிராட்டியூர் ஆர்டிஓவில் டீசல், பேட்டரி திருட்டு

73பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிங்குராசு. இவர் கடந்த மார்ச் 5-ந் தேதி தனது லாரியில் விறகு ஏற்றி கொண்டு சென்றார். அப்போது அவரது லாரியை சோதனை செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அவர் அதிகபாரம் ஏற்றி சென்ற தாக ரூ. 25 ஆயிரமும், சாலை வரி கட்டாததால் ரூ. 36, 500-ம் அபராதம் விதித்தனர். அவரிடம் பணம் இல்லாததால் லாரியை பறிமுதல் செய்து பிராட்டியூரில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் கொண்டு சென்று நிறுத்தினர். பின்னர் சிங்குராசு நகைகளை அடமானம் வைத்து அபராத தொகையை செலுத்திவிட்டு லாரியை மீட்பதற்காக வந்தார். அப்போது அவரது லாரியில் டீசல் இல்லாமலும், பேட்டரி திருட்டு போயும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டுவிட்டு, வாடகை பேட்டரி வாங்கி வந்து, கேனில் டீசல் வாங்கி லாரியில் நிரப்பி கொண்டு அங்கிருந்து சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி