நிபா வைரஸ் அறிகுறிகளுடன் பெண்ணுக்கு சிகிச்சை

52பார்த்தது
நிபா வைரஸ் அறிகுறிகளுடன் பெண்ணுக்கு சிகிச்சை
கேரளா: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். மலப்புரத்தைச் சேர்ந்த 40 வயது பெண், சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இன்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெண்ணுக்கு அண்மையில் மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி