தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் திருவிழா ஆய்வு கூட்டம்

69பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு அறிவுறுத்தல் கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால் சந்திரன், முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். அப்போது திருவிழா காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பலரும் பேசினர்.

அப்போது மதுரை காளியம்மன் கோயில் வீதி உலா செல்லும் அனைத்து இடங்களிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வீடியோ பதிவு செய்வது,
தொட்டியம் வட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினை திருவிழா நாட்களில் மூடக்கோரி காவல்துறையினர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து திருவிழா நடைபெறும் நாட்களில் விடுப்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்வது,
விழா நாட்களில் எந்த ஒரு சாதி சமய வேறுபாடு இல்லாமல் அமைதியான முறையில் திருவிழா கொண்டாடப்படவும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி எந்த ஒரு சாதி மத கொடிகள், சின்னங்கள் மற்றும் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜய்ஆனந்த், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி