பூலோக வைகுண்டம் என போற்றப்படும், 108 திவ்யதேசங்க ளில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு மாசி தெப்பத்திருவிழா கடந்த 12ம் தேதி தொடங் - கியது.
விழாவின் 7ம் நாளான
நேற்றுமுன்தினம் மாலை நம்பெருமாள் உபயநாச்சியார் களுடன் நெல்லளவு கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாகதெப்ப உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. நம்பெருமாள் உபயநாச்சி யார்களுடன் மூலஸ்தானத் திலிருந்து திருச் சிவிகையில் புறப்பட்டு மேலூர் ரோடு அருகே உள்ள தெப்பத்தில் எழுந்த ருளி இரவு 7. 30 மணி முதல் 9 மணி வரை தெப்ப உற்ச வம் கண்டருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு
ஆஸ்தான மண்டபம் சேர்ந்தார். மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலி ருந்து ஒற்றை பிரபை வாக னத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 9. 30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்து டன் தெப்பத்திருவிழா நிறைவடைந்தது.