ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. மேம்பாலத்தில் இருந்து இறங்கிவரும் கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் வெள்ள நீரில் நகர முடியாமல் ஊர்ந்து செல்கின்றன. இன்று (நவ 30) மாலை புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ள நிலையில், மேலும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.