பஞ்சாப் முதல்வரின் படத்தை எரித்து திருச்சியில் போராட்டம்.

81பார்த்தது
விவசாய பொருட்களுக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தி பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி விவசாயிகளை பஞ்சாப் காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக முழுவதும் விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அண்ணாமலை நகரில் விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு வீட்டில் காவல்துறையினர் பாதுகாப்புடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வீட்டுக்காவலில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென என பஞ்சாப் முதல்வர் உருவப் படத்தை எரித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பஞ்சாப் மாநில முதல்வருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி