திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் கே. கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி தலைமை வகித்தாா்.
இதில் பொதுமக்கள் அளித்த 34 மனுக்களை பெற்றுக் கொண்ட ஆணையா், அவற்றின் மீது உரிய தீா்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில் காவல் துணை ஆணையா்கள் வடக்கு மற்றும் தெற்கு, உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.
மேலும் மக்களுடன் முதல்வா் முகாம், முதல்வரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால் மற்றும் இணையதளம் வழியாக பொதுமக்கள் அளித்த 1, 465 மனுக்களில் 1, 333 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 132 மனுக்கள் விசாரணையில் உள்ளன.
நிகழாண்டு ஜனவரி முதல் இதுவரை நடைபெற்ற மாநகர குறைதீா் முகாமில் 1, 136 மனுக்கள் பெறப்பட்டு, 851 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளன.