அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

1026பார்த்தது
தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியிடப்பட உள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக திருச்சி பிரபா ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான் மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாஹா, அபூபக்கர் சித்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஷேக்கான், பேரவை மாவட்ட செயலாளர் பீர் மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி