திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்க வைத்திருந்தவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சத்ய விநாயகம் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காட்டுப்புத்தூர் சாஸ்திரி நகரில் தனது பெட்டிக்கடையில் ஜெயராமன் வயது 70 என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பதற்காக வைத்திருந்தார். இதைக்கண்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சத்ய விநாயகம் அவரை கைது செய்தார். அவரிடமிருந்து ரூ120 மதிப்புள்ள ஆறு ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.