பரஞ்சோதியின் உறவினர் கைது

70பார்த்தது
முசிறி காவல் நிலைய போலீசார் முசிறி காவிரி பெரியார் பாலம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இரண்டு கார்களை பிடித்து சோதனை செய்தனர். அந்த கார்களில் சோதனையில் எதுவும் கிடைக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களை முசிறி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் ஒருவர் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் உறவினர்அன்பரசு என்பதும் மற்ற இருவரும் அன்பரசுவின் நண்பர்கள் சிவராமன், பிரதாப் என தெரிகிறது. பரஞ்சோதியின் உறவினர் அன்பரசுவிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் அன்பரசுவின் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணத்தை வருமான வரி துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவரிடம் மேலும் பணம் உள்ளதா? அதை வேறு யாரிடமும் கொடுத்து பதுக்கி வைத்துள்ளனரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அன்பரசுவின் நண்பர்கள் சிவராமன் மற்றும் பிரதாப் ஆகியோரும் முசிறி காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டு அவர்கள் வந்த இரண்டு கார்களும் போலீஸ் வசம் உள்ளது.

இதன் காரணமாக காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் திரண்டு இருந்தனர். இதன் காரணமாக முசிறி காவல் நிலையம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் இரவு 12. 30 மணிக்கு போலீசார் அவர்களை விசாரணை முடித்து , தேவைப்படும் போது விசாரணைக்கு வரவேண்டும் என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி