மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது குரலை உயர்த்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய பினராயி விஜயன், "மாநில அரசுகள், மத்திய அரசின் பிரச்சார வாகனங்கள் போல நடத்தப்படுகின்றன. நாட்டின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை நிலை நாட்டுவதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.