முசிறி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைத்து பணியாளர் நலச்சங்கதிருச்சி மாவட்ட இளநிலை உதவியாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நாகநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் சரவணன் தலைமை விகித்தார் தொட்டியம் வட்டார கல்வி அலுவலக இளநிலை உதவியாளர்கள் சதீஷ்குமார், கார்முகில் செல்வன் முன்னிலை வகித்தனர் பி மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் ரமேஷ் பிரபு அனைவரையும் வரவேற்றார் திருவெள்ளறைஅரசு மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் கார்த்திகேயன் முசிறி மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் சுலோச்சனா ஆகியோர் சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் 10 வருடங்களாக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து பதவி உயர்வு ஏற்கும் இளநிலை உதவியாளர்களுக்கு லெவல் 12 பதவி உயர்வு , பணிவரன் முறை, தகுதி காண் பருவம் ஆகியவற்றிற்கு நியமன அலுவலரே ஆணை வழங்க வேண்டும் , பவானிசாகர் அடிப்படை பயிற்சி பணியேற்ற ஒரு வருடத்திற்குள் அனுப்ப வேண்டும், 10 வருடங்களுக்கு மேலாக பதவி உயர்வின்றி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை உதவியாளர்களாக தரம் உயர்த்த வேண்டும், நேரடி நியமன உதவியாளர் தேர்ந்தெடுக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் அரசு மேல்நிலைப்பள்ளிஇளநிலை உதவியாளர் சின்னத்துரை நன்றி கூறினார்.