திமுக பெண் நகராட்சி தலைவருக்கு அக்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பு

73பார்த்தது
திமுக பெண் நகராட்சி தலைவருக்கு அக்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பு
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் திமுக நகராட்சி தலைவர் சிவகாமி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அக்கட்சி கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக சிவகாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதனிடையில் தான் பழங்குடியினத்தவர் என்பதால் தன்னை சிறுமைப்படுத்துவதாக சிவகாமி புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி