முட்டை விலை சரிவு.. ரூ.4.10 என நிர்ணயம்

67பார்த்தது
முட்டை விலை சரிவு.. ரூ.4.10 என நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி இருக்கும் காரணத்தால் ஒரே நாளில் முட்டை விலை 20 காசு குறைந்து ஒரு முட்டை ரூ.4.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோழி பண்ணையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி