பாஜக 220 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது - சித்தராமையா

54பார்த்தது
பாஜக 220 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது - சித்தராமையா
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 220 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி 400 தொகுதிகளை இலக்காக கொண்டு தேர்தலை சந்திக்கும் நிலையில், சித்தராமையா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் பாதி தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அதனால் அவர்களுக்கு 220 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்றும் சித்தராமையா கூறினார். நாட்டிலும் மோடி அலை இல்லை, கர்நாடகாவில் மோடி அலை இல்லை என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி