ரயில் பயணிகளின் கவனத்திற்கு முன்பதிவில்லா ரெயில் பகுதி ரத்து

78பார்த்தது
ரயில் பயணிகளின் கவனத்திற்கு முன்பதிவில்லா ரெயில் பகுதி ரத்து
நெல்லை - மேலப்பாளையம் இடையே ரெயில் பாதையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி வண்டி எண்: 16844 பாலக்காடு - திருச்சி முன்பதிவில்லா ரெயில் இன்று (புதன்கிழமை), 23, 26-ந்தேதி களில் கரூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் கரூர் - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இதே போல் திருச்சி-பாலக்காடு முன்பதிவில்லா ரெயில் மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 90 நிமிடம் தாமதமாக மதியம் 2: 30மணிக்கு புறப்படும். இந்த மாற்றம் இன்று (புதன்கிழமை) மற்றும் 23, 26-ந்தேதிகளில் நடை முறையில் இருக்கும் என திருச்சி ரயில்வே நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி