நவம்பர் மாத ஜிஎஸ்டி: ரூ.1.82 லட்சம் கோடி வசூல்

53பார்த்தது
நவம்பர் மாத ஜிஎஸ்டி: ரூ.1.82 லட்சம் கோடி வசூல்
நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1.82 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.34,141 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,047 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.91,828 கோடி, செஸ் வரி ரூ.13,253 கோடியாகும். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.5% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மூன்றாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும். கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடியும், கடந்த அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி