ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில், 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை நேற்று சந்தித்தது. இந்த போட்டியில் இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா- மலேசியா அணிகள் மோதுகின்றன.