புயல் நிவாரண நிதியில் முறைகேடு: விஏஓவுக்கு 8 ஆண்டுகள் சிறை

84பார்த்தது
புயல் நிவாரண நிதியில் முறைகேடு: விஏஓவுக்கு 8 ஆண்டுகள் சிறை
கடலூர்: பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட கணிசப்பாக்கம் மற்றும் சித்தரைசாவடி கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட தானே புயல் நிவாரண நிதியில் ரூ 4 லட்சம் முறைகேடு செய்ததாக அக்கிராமத்தின் நிர்வாக அலுவலர் சம்பத் என்பவருக்கு எதிராக கடந்த 2014-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் நேற்று (பிப். 07) தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் சம்பத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி