பிரபல நடிகர் கிரி தினேஷ் (45) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கன்னட சினிமாவில் முக்கியமான நடிகராக திகழ்ந்த அவர் நவக்கிரஹா படத்தில் தர்ஷனுடன் இணைந்து நடித்ததில் ரசிகர்களிடையே அதிகம் புகழ்பெற்றார். நேற்று (பிப். 07) மாலை அவருக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்ட நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கிரி, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.