அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், மிசிசிப்பி ஜனநாயக கட்சியின் எம்பி பிராட்ஃபோர்ட் பிளாக்மோன், ஆண்கள் சுயஇன்பம் செய்வதை தடை செய்யவும், இதை மீறினால் குற்றமாக்கும் தனியார் மசோதாவை தாக்கல் செய்தார். இதனை மீறுபவர்களுக்கு ரூ.86,000 முதல் ரூ.8.65 லட்சம் வரை அபராதம் விதிக்க இம்மசோதா வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் கருத்தடை, கருக்கலைப்பில் ஆண்களின் பங்கு குறித்தான பிரச்னையை கொண்டு வருவதே இந்த மசோதாவின் நோக்கம் என கூறப்படுகிறது.