தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2ஏ மெயின் தேர்வு மாநிலம் முழுவதும் 82 மையங்களில் இன்று (பிப். 08) நடைபெற உள்ளது. 2006 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வை 21,563 பேர் எழுதுகின்றனர். குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் (கிரேடு 2) உள்ளிட்ட 534 பணியிடங்கள் அடங்கும்.