அமெரிக்காவை சேர்ந்த ஜோசப் ஷேன் - கிரிஸ்டினா எலிசபெத் தம்பதி நடாலி கார்சியா (6) என்ற சிறுமியை கடந்த 2018-ல் தத்தெடுத்தனர். 2020-ல் மகளை கொலை செய்த தம்பதி வீட்டு கொல்லைப்புறத்தில் புதைத்தனர். இந்த சம்பவம் 2024 இறுதியில் வெளிவந்த நிலையில் சிறுமியின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. தொடர்ந்து ஜோசப் - எலிசபெத் கைதானார்கள். நீதிமன்ற விசாரணையில் சிறுமி கொடூரமாக துன்புறுத்தப்பட்டது தெரியவந்துள்ளது, விசாரணை தொடர்கிறது.