தமிழக வெற்றிக் கழகத்தின், 120 மாவட்ட செயலாளர்களை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறக்கவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கவும் அக்கட்சியின் தலைவர் விஜய் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’ஆட்சியில் பங்கு' என்ற உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், எஞ்சியுள்ள 114 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க உள்ளதாவும் கூறப்படுகிறது.