அரக்கோணத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு இன்று (பிப். 08) லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. லாரி முழுவதிலும் சிமெண்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆம்பூர் அருகே 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.