மாருதி சுசுகி கார்களின் விலை 4% வரை உயரவுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து கார்களின் விலையை உயர்ந்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்திருந்தது. இதனிடையே கடந்த நவம்பரில் மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் கிரெட்டா, டாடா பஞ்ச், டாடா நெக்ஸான், மாருதி எர்டிகா உள்ளிட்ட கார்கள் அதிக விற்பனையை செய்து மார்க்கெட்டில் முன்னணியில் உள்ளன.