தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மலக்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நேற்று அதிகாலை நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்குகள் தீயில் கருகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.