திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன் ( 60). இவர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் 37பவுன் வகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர்
சண்முக சுந்தரம் தலைமையில் போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மணப்பாறை தாலுகா, இ. கோவில்பட்டியை சேர்ந்த கஸ்தூரி (45), அவருடைய மகன் சூர்யபிரகாஷ் (29), திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் தாலுகா வேட்டவலம் பகுதியை சேர்ந்த குமார் மகன் சத்ய ராஜ் (23), திண்டுக்கல்
மாவட்டம் நாகல் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (59) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.