'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து பள்ளி மாணவர்கள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்த 4 மாணவர்கள், துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து, அதே போல் வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து மாயமாகியுள்ளனர். பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.