தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில் ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும், இவர்கள் திருமணம் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ளதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.