துவாக்குடி: கழிவறையில் மயங்கி விழுந்த முதியவர் பலி
திருச்சி துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவராயனேரி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 57). நேற்று (நவம்பர் 11) வீட்டில் கழிவறைக்குச் சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறிய நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.