தாய்லாந்து நாட்டில் நரத்திவாத் மாகாணத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு பல வருடங்களாக வயிற்றின் அடிப்பகுதியில் வலி இருந்து வந்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு அப்பெண்ணிற்கு பிரசவம் நடந்தபோது செவிலியர் ஒருவர் தவறுதலாக ஊசி ஒன்றை பிறப்புறுப்பில் வைத்துவிட்டார். அதனை தையல் போடும்போது எடுக்கும் முயற்ச்சியில் தோல்வியடைந்து மருத்துவர் அப்படியே விட்டுவிட்டார். தற்போது அந்த ஊசி இருக்கும் இடம் மாறிக்கொண்டே இருப்பதால் அறுவைசிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.