திருச்சி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் அடுத்த புலிவலத்தை சேர்ந்தவர் சூர்யா இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வருவதாக திருச்சி இருப்புப் பாதை போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன், டிஎஸ்பி சக்கரவர்த்தி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று(நவ.13) உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டார்.