இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

60பார்த்தது
இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
திமுக வெளியிட்ட அறிக்கையை மொட்டை காகித அறிக்கை என கூறிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும், கோரிக்கையை நிறைவேற்றுவதும் திமுகதான் என்பதை அவர்களே அறிவார்கள். அவர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும். கபட வேடதாரி இபிஎஸ்யையும், அதிமுகவையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி