திருச்சி மேலப்பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் ரேகா. இவர் நேற்று (நவம்பர் 12) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் சென்றார். அப்போது கண்டோன்மென்ட் பகுதியில் பஸ் சென்றபோது இவரது கைப்பையை ஒருவர் திருடினார். உடனே சுதாரித்த ரேகா மற்றும் பயணிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கண்டோன்மென்ட் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தென்மனூரை சேர்ந்த முகமது சலீம் என்பது தெரியவந்தது.